ABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0

யமஹா நிறுவனம் டியூவல் சேனல் ABS பிரேக் உடன் கூடிய YZF-R15 V3.0 மாடலை ரூ 1.39 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 12,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் டார்க்நைட் எனும் புதிய கருப்பு வண்ணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இது மற்ற மாடலை விட ரூ 2000 அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் தண்டர் க்ரே, ரேஸிங் ப்ளூ மற்றும் டார்க்நைட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும்.  இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் முறையே 282mm மற்றும் 220mm விட்டம் கொண்ட  டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய யமஹா YZF-R15 V3.0 மாடல் பஜாஜ் பல்சர் RS 200 மற்றும் KTM RC 200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.