ரூ 59,889 விலையில் வெளியிடப்பட்டது ஒகினவா ப்ரைஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவை சேர்ந்த ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் ரூ 59,889 டெல்லி ஷோரூம் விலையில் புதிய ப்ரைஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஒகினவா நிறுவனம் ஏற்கனவே ரிட்ஜ் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகிறது. தற்போது இரண்டாவது மாடலை வெளியிட்டுள்ளது. முந்தய மாடலை விட இந்த மாடல் அனைத்து விதத்திலும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய பெரிய முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு சற்று ஹோண்டா டியோ போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் கேஸ் சார்ஜெட் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் ட்வின் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் பெரிய 12 இன்ச் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2500 watt கொண்ட மின் மோட்டாரும் 72V/45Ah கொண்ட VRLA பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். மேலும் இந்த மாடலில் 72V/45Ah கொண்ட லித்தியம்-அயர்ன் பேட்டரியும் ஆப்ஷனாக கிடைக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம்  வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் 22 டிகிரி வரை சரிவாக உள்ள சாலையிலும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் எக்கனாமி, ஸ்போர்ட்டி மற்றும் டர்போ என மூன்று டிரைவ் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எக்கனாமி மோடில் அதிகபட்சகமாக மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் வரையும் ஸ்போர்ட்டி மோடில் 65 கிலோமீட்டர் வேகம் வரையும் மற்றும் டர்போ மோடில் 75 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.