பியாஜ்ஜியோ தனது மூன்றாவது ஷோரூமை சென்னையில் தொடங்கியது

பியாஜ்ஜியோ நிறுவனம் புனே மற்றும் ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது தனது ப்ரீமியம் மொட்டோப்லக்ஸ் ஷோ ரூமை சென்னையில் தொடங்கியது. இந்த  மொட்டோப்லக்ஸ் ஷோரூமில் பியாஜ்ஜியோ குழுமத்தின் கீழ் இயங்கும் அணைத்து பிராண்ட் மோட்டார் பைக்குகளும் கிடைக்கும். 

இதேபோல் மொட்டோப்லக்ஸ் கான்செப்ட் ஷோரூம்களை பியாஜ்ஜியோ நிறுவனம் உலகம் முழுவதும் நிறுவியுள்ளது. இந்த ஷோ ரூம் 4 வது அவென்யு, அசோக் நகர், சென்னை எனும் முகவரியில் சுமார் 4061 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இந்த ஷோரூமில் வெஸ்பா பிராண்ட் ஸ்கூட்டர்கள், அப்ரிலிய பிராண்ட் சூப்பர் பைக்குகள் மற்றும் மோட்டோ குஷ்ஷி பிராண்ட் குரூசர் பைக்குகள் கிடைக்கும். இந்த மொட்டோப்லக்ஸ் கான்செப்ட் ஷோரூம்களை மேலும் பல மெட்ரோ நகரங்களிலும் திறக்க பியாஜ்ஜியோ திட்டமிட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.