வெஸ்பா ரெட் 125 மாடலை வெளியிட்டுள்ளது பியாஜ்ஜியோ

பியாஜ்ஜியோ நிறுவனம் வெஸ்பா ரெட் 125 மாடலை ரூ 87,000  மஹாராஷ்டிரா ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. ரெட் வெர்சன் என்பது பியாஜ்ஜியோ நிறுவனம் ரெட் எனும் தொண்டு நிறுவனத்திற்காக தயாரிக்கும் மாடல் ஆகும். பியாஜ்ஜியோ நிறுவனம் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் ரெட் எடிசன் பொருள்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் கூட ஐபோன் ரெட் எனும் மாடலை வெளியிட்டது நினைவிருக்கலாம். ஒவ்வொரு ரெட் எடிசன் மாடல்கள் விற்பனையாகும் போதும் ஒரு குறிப்பிட்ட தொகை ரெட் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். 

பியாஜ்ஜியோ நிறுவனம் இதுவரை வெஸ்பா 946 ரெட் மாடலை மட்டுமே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெட் எடிசன் மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுவதும் சிவப்பு வண்ணமும் குரோம் அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 125 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  10.06 bhp (7000 rpm) திறனும்  10.6 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 47 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.