இந்தியாவில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் புல்லட் ட்ரைல்ஸ் ஒர்க்ஸ் ரெப்லிகா 350 மற்றும் 500

ராயல் என்பீல்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புல்லட் ட்ரைல்ஸ் ஒர்க்ஸ் ரெப்லிகா 350 மற்றும் 500 மாடலை முறையே ரூ 1.62 லட்சம் மற்றும் ரூ 2.07 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மாடல்களில் ஒன்றான புல்லட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் விநியோகம் இன்று முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராயல் என்பீல்ட் நிறுவனம் 1950 களில் வெளியிட்டு வந்த ஸ்க்ராம்ப்ளர் வடிவமைப்பிலான மாடலின் பெயரையும் சில வடிவமைப்புகளையும் இந்த மாடலில் பயன்படுத்தியுள்ளது. மேலும், பழமையான ஸ்க்ராம்ப்ளர் மாடலின் வடிவமைப்புகளை அதிகமாக பயன்படுத்தியுள்ளது. இந்த மாடலில் புகைபோக்கி, பின்புற வடிவமைப்பு, முகப்பு விளக்கு மற்றும் ஹேண்டில் பார்  ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. மேலும் லக்கேஜ் ரேக்க்கும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடலில் ஒரே ஓரு சில்வர் வண்ண தேர்வில் தான் கிடைக்கும். மேலும், 350 மாடலில் சிவப்பு வண்ண பிரேமும், 500 மாடலில் பச்சை வண்ண பிரேமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் மாற்றம் இல்லை, கிளாசிக் மாடலில் உள்ள அதே 346cc மற்றும் 499cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சின்களில் தான் கிடைக்கும். இதன் 346cc என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது மற்றும் 499cc என்ஜின் 27.2 bhp (5250rpm) திறனும் 41.3 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், டியூவல் சேனல் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.