ABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350

ராயல் என்பீல்ட் நிறுவனம் ABS பிரேக் உடன் கூடிய கிளாசிக் 350 மாடலை ரூ 1.53 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ABS பிரேக் அல்லாத ட்வின் டிஸ்க் மாடலை விட ரூ 5800 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் ABS பிரேக் தவிர வேறு எந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை. ராயல் என்பீல்ட் நிறுவனம் ABS பிரேக் உடன் கூடிய முதல் மாடலான கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 346 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 45 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் முன்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் டியூவல் சேனல் ABS சிஸ்டமும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு அணைத்து ராயல் என்பீல்ட் பைக்குகளும் ABS உடன் வெளியிடப்படும் என ராயல் என்பீல்ட் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.