சில மேம்பாடுகளுடன் வெளியிடப்பட உள்ளது ராயல் என்பீல்ட் கிளாசிக்

ராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மாடல்களை சில மேம்பாடுகளுன் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்கள் ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் இருந்து கசிந்த சில கோப்புகள் மூலம் தெரிய வருகிறது.

ஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொறுத்த உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமில்லாமல் கிளாசிக் 350 மாடல் கூடுதலாக கன் க்ரே வண்ணத்திலும் கிளாசிக் 500 மாடல் கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் வண்ணத்திலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.