மார்ச் 17 முதல் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் மாடலின் முன்பதிவு தொடங்கப்படுகிறது

ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் மாடலின் முன்பதிவு  மற்றும் டெஸ்ட் டிரைவ் மார்ச் 17 ஆம் தேதி  முதல் தொடங்கப்படும் என ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான்  ஈச்சேர் மோட்டார் நிறுவன CEO சித்தார்த்தா லால் அவர்கள் இந்த மாடலை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மாடல் ஆஃப் மற்றும் டூரர் எனும் புதுமையான வகையை சேர்ந்தது. இது இந்த செக்மெண்டில் வெளியிடப்படும் முதல் மாடல். நீண்ட தூரம் மற்றும் இமயமலை பயணம் செய்வோரை மனதில் வைத்து இந்த மாடலை உருவாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். மேலும் இந்த மாடலில் முதன் முதலாக மானோ ஷாக் எனும் ஒற்றை சஷ்பென்சனை பொருத்தியுள்ளது. அனைத்திற்கும் மேலாக ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் வரும் சத்தம் இதில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 411cc ,கொண்ட புத்தம் புதிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24.5 Bhp திறனை வழங்கும். இந்த மாடலின் இருக்கை 800 மில்லி மீட்டர் உயரம் கொண்டது. எனவே உய்ரம் குறைவானவரும் எளிதாக அமர முடியும். அதே சமயம் தரை இடைவெளியும் கரடுமுரடான சாலைகளில் செல்ல ஏற்ற அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.