விரைவில் வெளியிடப்படும் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்று. இந்த மாடல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிமாலயன் மாடல் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் ராயல் என்பில்ட் நிறுவனம் இதுவரை  வெளியிடவில்லை. இருப்பினும் ஹிமாலயன் என்ற பெயரை பதிவு செய்திருப்பதுடன் இந்த மாடலை சாலைகளில் சோதனை செய்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் தொழிற்சாலையில் உற்பத்தி நிலையில் இருக்கு மாடல் கசிந்தது.

இந்த மாடல் 400CC கொள்ளளவு கொண்ட என்ஜினில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் நேகட் அல்லது கேப் ரேசர் மாடல் வகையை சேர்ந்ததாக இருக்கும். மேலும் இது 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.