ராயல் என்பீல்ட் இன்டெர்செப்டர் 650

ராயல் என்பீல்ட் நிறுவனம் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு 650cc எஞ்சின் கொண்ட இன்டெர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை இத்தாலியில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இன்டெர்செப்டர் 650 மாடல் ரொட்ஸ்டெர் மாடல் போலவும் கான்டினென்டல் GT 650 மாடல் கபே ரேசர் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களிலும் ஒரே எஞ்சின் மற்றும் பிரேம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 648cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47 bhp @ 7,100 rpm திறனையும் 52 Nm @ 4,000 rpm இழுவைத்திறனையும் வழங்கும். ராயல் என்பீல்ட் நிறுவனம் குறைவான எஞ்சின் வைப்ரேஷன் வழங்குவதற்காக பயரிங் ஆர்டரை 270  டிகிரி கோணத்தில் வைத்துள்ளது. 

மேலும் இந்த இரண்டு மாடலிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் டியூவல் சேனல் ABS  பிரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ரூ 3 லட்சம் முதல் ரூ 4 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.