மிகச்சவாலான விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் இன்டெர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650

ராயல் என்பீல்ட் நிறுவனம் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு 650cc எஞ்சின் கொண்ட இன்டெர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை முறையே ரூ ரூ 2.5 லட்சம் மற்றும் ரூ 2.65 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் ஸ்டாண்டர்ட், கஷ்டம் மற்றும் குரோம் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். வேரியன்ட்டுகளுக்கு ஏற்ப வண்ணம் மட்டுமே மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த மாடல்களின் விநியோகம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இந்த மாடல்கள் முதலில் 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்டெர்செப்டர் 650 மாடல் ரொட்ஸ்டெர் மாடல் போலவும் கான்டினென்டல் GT 650 மாடல் கபே ரேசர் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
இன்டெர்செப்டர் 650

  • Standard – ரூ 2.50 லட்சம்
  • Custom – ரூ 2.57 லட்சம்
  • Chrome – ரூ 2.70 லட்சம்

கான்டினென்டல் GT 650

  • Standard – ரூ 2.65 லட்சம்
  • Custom – ரூ 2.72 லட்சம்
  • Chrome – ரூ 2.85 லட்சம்

 
இந்த இரண்டு மாடல்களிலும் ஒரே எஞ்சின் மற்றும் பிரேம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 648cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47 bhp @ 7,100 rpm திறனையும் 52 Nm @ 4,000 rpm இழுவைத்திறனையும் வழங்கும். ராயல் என்பீல்ட் நிறுவனம் குறைவான எஞ்சின் வைப்ரேஷன் வழங்குவதற்காக பயரிங் ஆர்டரை 270 டிகிரி கோணத்தில் வைத்துள்ளது.

கான்டினென்டல் GT 650 மாடலும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கான்டினென்டல் GT மாடலும் ஒரே போல் தோற்றமளித்தாலும் 95 சதவீதம் வித்தியாசமான பாகங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என ராயல் என்பீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு மாடலிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் டியூவல் சேனல் ABS பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.