இரண்டு புதிய வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் மாடல்கள்

ராயல் என்பீல்ட் நிறுவனம் சில மேம்பாடுகளுன் கூடிய  கிளாசிக் மாடல்களின் இரண்டு புதிய வேரியன்ட்டுகளை வெளியிட்டுள்ளது.  கன்மெட்டல் க்ரே வண்ணனத்தை கொண்ட கிளாசிக் 350 மாடல் ரூ 1.59 லட்சம் டெல்லி ஆன் ரோடு விலையிலும் ஸ்டெல்த் பிளாக் வண்ணனத்தை கொண்ட கிளாசிக் 500 மாடல் ரூ 2.05 லட்சம் டெல்லி ஆன் ரோடு விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொருத்தி உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தி உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது மட்டுமில்லாமல் கிளாசிக் 350 மாடல் கூடுதலாக கன் க்ரே வண்ணத்திலும் கிளாசிக் 500 மாடல் கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் வண்ணத்திலும் கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே எஞ்சினில் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.