ராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது

ராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் மாடலின் அடிப்படையிலான ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மார்ச் 26 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த மாடல் கிளாசிக் மாடல் போலவே 350cc மற்றும் 500cc எஞ்சின் தேர்வில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் புகைபோக்கி, பின்புற வடிவமைப்பு ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. மேலும் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பின்பு தான் தெரிய வரும். மேலும் இந்த மாடல் டியூவல் சேனல் ABS பிரேக் உடன் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் எஞ்சினில் மாற்றம் இருக்காது, கிளாசிக் மாடலில் உள்ள அதே 346cc மற்றும் 499cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சின்களில் தான் கிடைக்கும். இதன் 346cc என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது மற்றும் 499cc என்ஜின் 27.2 bhp (5250rpm) திறனும் 41.3 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்... 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.