பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும் ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் 500X மற்றும் 350X

ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் மாடலின் அடிப்படையிலான புதிய தண்டர் பேர்ட் 500X மாடலின் படங்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு கசிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த தண்டர் பேர்ட் 500X மற்றும் 350X மாடல்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் ராயல் என்பீல்ட் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த மாடலில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் புதிய ஹேண்டில் பார், கிளாசிக் ரெட்டிச் சீரீஸ் போன்ற வண்ணம்,புதிய இருக்கை, புதிய அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் என நிறைய ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் மாடல்களில் முதன் முறையாக இந்த மாடலில் தான் அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் பின்புற வீல் ரிம் அமைப்பும் சிறிது மாற்றம் பெற்றுள்ளது.


 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 499cc  மற்றும் 346cc கொள்ளளவு  கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 499cc என்ஜின்  27.2 bhp (5250rpm)   திறனும் 41.3 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 346cc என்ஜின்  19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.