நவம்பர் 6 புதிய பைக் மாடலை வெளியிடும் ராயல் என்பீல்ட்

ராயல் என்பீல்ட் நிறுவனம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி இத்தாலியில் நடைபெறும் 2018 EICMA மோட்டார் கண்காட்சியில் ஒரு புத்தம் புதிய பைக் மாடல் வெளியிடப்படும் என ஒரு டீசர் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தை வைத்து பார்க்கும் போது இது ஒரு பாபர் ஸ்டைல் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் LED முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதும் படத்தில் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 648cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் புதிய மாடல் தொடர்பான கூடுதல் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.