புதிய ஸ்குவாட்ரன் ப்ளூ வண்ணத்தில் வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்  நிறுவனத்துடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றுவதை கொண்டாடும் விதமாகவும் ஏர் ஃபோர்ஸ்  மற்றும் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் இந்த புதிய ஸ்குவாட்ரன் ப்ளூ வண்ணத்திலான கிளாசிக் 500 மாடலை வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் உலகப்போர்களில் பிரிட்டன் நாடால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியாவும் 1950 ஆண்டிலிருந்து இன்று வரை ராயல் என்ஃபீல்ட் பைக்குகளையே ராணுவத்தில் பயன்படுத்தி வருகிறது. சிறந்த திறன், கரடு முரடான தோற்றம், அணைத்து சாலைகளிலும் செல்லும் வல்லமை மற்றும் குறிப்பாக பைபர் அல்லாமல் முற்றிலும் இரும்பால் வடிவமைக்கபடுவது போன்ற காரணங்களால் இதனை வருடமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இந்த  ஸ்குவாட்ரன் ப்ளூ வண்ணம் கிளாசிக் 500 மாடலில் மட்டும் கிடைக்கும். மேலும் சென்னையில் ரூ.198,649  ஷோரூம் விலையில் கிடைக்கும்.  இந்த மாடலில் 499 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது  27.2 bhp (5250rpm)   திறனும் 41.3 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.