மூன்று புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350

ராயல் என்பீல்ட் நிறுவனம் சிவப்பு, பச்சை மற்றும் ப்ளூ எனும் மூன்று புதிய வண்ணங்களில் கிளாசிக் 350 மோட்டார் பைக்கை ரெட்டிட்ச் சீரீஸ் எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ரெட்டிட்ச் எனும் இடத்தின் பெயரை இந்த மாடலுக்கு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் இங்கிலாந்தில் பர்மிங்காம் எனும் பகுதியில் இருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ரெட்டிட்ச் சீரீஸ் மாடலில் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிதாக மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மாடல் ரூ. 1,47,831 சென்னை ஆன் ரோடு விலையில் கிடைக்கும். மேலும் இந்த முன்பதிவு ஜனவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

இந்த மாடலில் அறிமுக விழாவில் பேசிய ராயல் ஏபிஎல்ஸ் நிறுவனத்தின் ப்ரெசிடெண்ட் திரு. ருட்ரடேஜ் சிங், ராயல் என்பீல்ட் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு  J2 மாடலின் அடிப்படையிலான கிளாசிக் மாடல்களை வெளியிட்டது. மேலும் எங்கள் நிறுவனம் அதிகளவில் பழமையான வடிவமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அதன்படி தற்போது ரெட்டிட்ச் சீரீஸ் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.