வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் சிறப்ப பதிப்பு

ராயல் என்பீல்ட் நிறுவனம் ஹிமாலயன் ஸ்லீட் சிறப்ப பதிப்பு மாடலை ரூ 2.12 லட்சம் சென்னை ஆன் ரோடு விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் வெறும் 500 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலை ஜனவரி 30 ஆம் தேதி ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் இணையத்தில் மட்டுமே ரூ 5000 செலுத்தி முன்பதிவு செய்ய முடியும். இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 26000 அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் புதிய வெள்ளை மற்றும் க்ரே கலந்த வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் எஸ்ப்ளோரர் கிட் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்களும் இரண்டு வருட வாரன்டி கொடுக்கிறது.

இந்த மாடலில் எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதே 411cc கொள்ளளவு கொண்ட என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 24.5 Bhp திறனையும் 32 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த திறன் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.