ஸ்பெயின் மற்றும் பிரான்சில் புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் மற்றும் பிரான்சில் புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது. இந்த ஸ்டோர் பிரான்சில் கேபிடல் சிட்டியிலும் ஸ்பெயினில் மேட்ரிடிலும் அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஏற்கனவே பிரான்சில் 80 ஷோரூம்களையும் ஸ்பெயினில் 25 ஷோரூம்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஸ்டோரில் அனைத்து மாடல்களும் மற்றும் அனைத்து உபகரணங்களும் கிடைக்கும். சரியான விலை மட்டும் சிறந்த நம்பக தன்மை போன்றவற்றால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் உலக மக்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.