ரூ 71,064 விலையில் வெளியிடப்பட்டது சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்

சுசூகி நிறுவனம் தனது முதல் மேக்சி-ஸ்டைல் ஸ்கூட்டர் மாடலான பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலை இந்தியாவில் ரூ 71,064 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED பின்புற விளக்குகள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் சுசூகி ஆக்சஸ் மாடலில் உள்ள 125cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7PS @ 7,000rpm திறனையும் 10.2Nm @ 5,000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலின் முன்புறம் டிஸ்க் பிரேக்கும் பின்புறம் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் USB சார்ஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.