நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் சுசூகி இன்ட்ரூடர் 150

சுசூகி நிறுவனம் தனது ஆரம்ப நிலை குரூஸர் மாடலான இன்ட்ரூடர் 150 மாடலை நவம்பர் ஏழாம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடல் பஜாஜ் அவெஞ்சர் மாடலுக்கு போட்டியாக நிலைநிநிறுத்தப்படும். 

இணையத்தில் கசிந்த சில படங்களை வைத்து பார்க்கும் போது, இந்த மாடல் இன்ட்ரூடர் M1800R மாடலில் இருந்து அதிகபடியான வடிவங்கள் இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும் ஜிக்சர் மாடலில் இருந்தும் சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுசூகி நிறுவனம் இதை ஒரு சிறந்த ஆரம்ப நிலை குரூஸர் மாடலாக வடிவமைத்துள்ளது. எனவே நிறைய சொகுசு உபகரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிக்சர் மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே 154.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  14.8 bhp திறனும் 14 NM டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் தோராயமாக ரூ 1 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.