வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு சுசுகி ஜிக்சர் SP மற்றும் சுசுகி ஜிக்சர் SF SP

சுசூகி நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஜிக்சர் SP எடிசன் மாடலை ரூ 81,175 டெல்லி ஷோரூம் விலையிலும் ஜிக்சர் SF SP எடிசன் மாடலை ரூ 99,312 டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில புதிய வண்ணங்களும் மற்றும் புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிக்சர் SF SP மாடலில் கூடுதலாக ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக புதிய கிராபிக்ஸ் மற்றும் SP  லோகோ ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிக்சர் SF SP மாடலில் கூடுதலாக பியூவல் இன்ஜெக்ஷ்ன மற்றும்  ABS சிஸ்டமும் மற்றும் ஜிக்சர் SP மாடலில் ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ண கலவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 154.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  14.8 bhp (8000rpm)   திறனும் 14 NM (6000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.