வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு சுசூகி ஜிக்சர் மற்றும் ஜிக்சர் SF

சுசூகி நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஜிக்சர் மற்றும் ஜிக்சர் SF மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களில் புதிய வண்ணம் மற்றும் கிராபிக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இந்த 2018 ஆம் ஆண்டு மாடல்களின் விலையிலும் மாற்றம் இல்லை, சுசூகி ஜிக்சர் மாடல் ரூ 80,928 டெல்லி ஷோரூம் விலையிலும் ஜிக்சர் SF மாடல் ரூ 90,037 டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடல் கூடுதலாக சிவப்பு மற்றும் க்ரே வண்ண கலவையிலும் கிடைக்கும். மேலும் புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 bhp (8000rpm)  திறனும் 14 NM (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த புதிய வண்ணம் மற்றும் கிராபிக்ஸுகள் பியூவல் இன்ஜெக்ட்டேட் ஜிக்சர் மற்றும் ஜிக்சர் SF மாடல்களிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.