ரூ.88,990 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய TVS அபாச்சி RTR 200 4V

TVS நிறுவனம் 200 சக் என்ஜின் கொண்ட அபாச்சி RTR 200 4V மாடலை ரூ.88,990 ஆரம்ப விலையில்  வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. கார்பரேடர் கொண்ட மாடல் ரூ.88,990 டெல்லி ஷோரூம் விலையிலும்,  பியுயல் இன்ஜெக்சன் கொண்ட  மாடல் ரூ.1.07 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் மற்றும் ABS கொண்ட மாடல் ரூ.1.17 லட்சம்  டெல்லி ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் 197.75cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.23 Bhp திறனையும்  18.1 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் 60 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் மஞ்சள், சிவப்பு, கிரே, கருப்பு, மேட் கருப்பு, மேட் வெள்ளை மற்றும் வெள்ளை ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும். 

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் முழுவதும் டிஜிட்டல் முறையினாலானது. மேலும் இந்த மாடல் நேகட் மாடல் வகையை சேர்ந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.