புத்தம் புதிய ரேடியான் பைக் மாடலை ரூ 48,400 விலையில் அறிமுகப்படுத்தியது TVS

TVS நிறுவனம் ரேடியான் எனும் புத்தம் புதிய கம்யூட்டர் பைக் மாடலை ரூ 48,400 டெல்லி ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற வாடிக்கையாளர்கள் மற்றும் ஆரம்ப நிலை பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த மாடலை வெளியிட்டுள்ளது TVS நிறுவனம். சட்டென்று பார்ப்பதற்கு இந்த மாடல் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மாடல் போன்ற தோற்றத்தை தருவதை தவிர்க்க முடியவில்லை. 

இந்த மாடலில் 109.7cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் Dura-Life air-cooled எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.4PS@7000 rpm திறனையும் 8.7Nm @5000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 69.3kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் கருப்பு, வெள்ளை, பீஜ் மற்றும் பர்பிள் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 18-இன்ச் அலாய் வீல், USB சார்ஜிங் போர்ட் மற்றும் சைடு ஸ்டான்ட் இண்டிகேட்டர் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹோண்டா CD100, ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 110 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.