i-Touch ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் வெளியிடப்பட்டது TVS XL100 HD

TVS நிறுவனம் i-Touch ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய XL100 HD மொபெட் மாடலை ரூ 36,109 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 2600 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மாடலில் மற்ற மாடலில் உள்ளது போல் ஸ்டார்ட்டர் மோட்டார் அல்லாமல் புதிய இன்டெக்ரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனெரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தில் 30% குறைவான பேட்டரி மட்டுமே பயனாகும் எனவும் மேலும் இதன் பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்ட் செய்யும் போது குறைவான சத்தமே வரும் எனவும் TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய TVS XL100 HD மாடலில் USB சார்ஜிங் போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஒரு சிலிண்டர் கொண்ட 99.7cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 4.3 Bhp @6000rpm திறனையும் 6.5 Nm @3500rpm இழுவைதிறனையும் வழங்கும். இதன் திறன் ஒரு ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் வெட் டைப் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. TVS XL மாடல் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்றும் மக்களின் ஆதரவையும் பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.