வெளியிடப்பட்டது புத்தம் புதிய TVS அப்பாச்சி RTR 160 4V

TVS நிறுவனம் புத்தம் புதிய அப்பாச்சி RTR 160 4V மாடலை ரூ 81,490 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாச்சி RTR 160 மாடல் தான் அப்பாச்சி சீரீஸில் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் ஆகும். அதன் பிறகு சிறு சிறு மாற்றங்களை பெற்று வந்த மாடல் தற்போது முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் அப்பாச்சி RTR 200 4V மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்:

  • அப்பாச்சி RTR 160 4V (carb, single disc) - Rs 81,490
  • அப்பாச்சி RTR 160 4V (carb, dual disc) - Rs 84,490
  • அப்பாச்சி RTR 160 4V (Fi, Dual disc) - Rs 89, 990

2018 ஆம் ஆண்டு அப்பாச்சி RTR 160 4V மாடலில் முகப்பு விளக்கு, டேங்க், பின்புற விளக்கு மற்றும் புகைபோக்கி ஆகியவை அப்பாச்சி RTR 200 4V மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. சைடு பேனல் மற்றும் இருக்கை ஆகியவை வேறுபட்டு காணப்படுகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் Showa டெலஸ்கோபிக் போர்க்கும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 4 வால்வ் கொண்ட 159.7 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் கார்பரேட்டர் மாடல் 16.5PS திறனையும் FI மாடல் 16.8PS திறனையும் (@8000rpm)  வழங்கும். மற்றும் அதிகபட்சமாக இரண்டு மாடலும் 14.8Nm @ 6500rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல்கள் 60 கிலோமீட்டர் வேகத்தை கார்பரேட்டர் மற்றும் FI மாடல்கள் முறையே 4.73 மற்றும் 4.8 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலின் முன்புறத்தில் 270 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில்  200 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் ஆப்ஷனாகவும் கிடைக்கும்.

இந்த புதிய 2018 ஆம் ஆண்டு அப்பாச்சி RTR 160 4V மாடல் ஹோண்டா X பிளேடு, ஹார்னெட் மற்றும் ஹீரோ எஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் போன்ற மாடல்களும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.