புதிய மேட் சிவப்பு வண்ணத்தில் வெளியிடப்பட்டது TVS அப்பாச்சி

பண்டிகை காலத்தை முன்னிட்டு TVS நிறுவனம் புதிய மேட் சிவப்பு வண்ணத்தினாலான அப்பாச்சி RTR160, அப்பாச்சி RTR180 மற்றும் அப்பாச்சி RTR2004V மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வண்ணம் மற்றும் மேட் க்ரே மற்றும் வெள்ளை வண்ண புதிய கிராபிக்ஸும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

அப்பாச்சி RTR 200 4V
இந்த மாடலில் 197.75cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.23 Bhp திறனையும்  18.1 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் 60 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

அப்பாச்சி RTR180
இந்த மாடலில் 177.4 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த பெட்ரோல் என்ஜின்  17.3 bhp (8500 rpm) திறனும் 15.5 Nm (6500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 45 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

அப்பாச்சி RTR160
இந்த மாடலில் 159.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த பெட்ரோல் என்ஜின்  15.2 bhp (8000 rpm) திறனும் 13.1 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.