வெளியிடப்பட்டது புதிய TVS அபாச்சி RTR 160 ரேஸ் எடிசன்

தமிழகத்தை சேர்ந்த TVS நிறுவனம் புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிசன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் பேஸ் மாடல் ரூ  79,715 (டெல்லி ஷோரூம்) விலையிலும் இரண்டு சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ 82,044 (டெல்லி ஷோரூம்) விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெறும் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது மற்றபடி எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த புதிய வண்ணம், புதிய 3D லோகோ மற்றும் புதிய கிராபிக்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் அதே 159.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த  என்ஜின்  15.2 bhp (8000 rpm) திறனும் 13.1 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் யமஹா FZ, சுசூகி சிக்ஸர் மற்றும் ஹோண்டா ஹார்னெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.