பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது TVS

TVS நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய வண்ணம் மற்றும் சின்க்ரோனைஸ்ட் பிரேக்கிங் தொழில்நுட்பமும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ரூ 52,907 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் க்ரே மற்றும் கருப்பு வண்ண கலவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சின்க்ரோனைஸ்ட் பிரேக்கிங் தொழில்நுட்பமும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்நுட்பம் மூலம் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு பிரேக்கும் ஒரே நேரத்தில் செயல்படும். இது ஹோண்டா நிறுவனத்தின் காம்பி பிரேக் சிஸ்டம் போன்றதே என்பது குறிப்பிடத்தக்கது. 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே  109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  8.4 bhp (7000 rpm) திறனும் 8.7 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 86 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.