பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜூபிடர் கிராண்டே சிறப்பு பதிப்பு ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது TVS

TVS நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜூபிடர் கிராண்டே சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது.  இந்த மாடலில் சில கூடுதல் வசதிகளும், ஒப்பனை மாற்றங்களும் மற்றும் புதிய ப்ளூ வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

TVS ஜூபிடர் கிராண்டே சிறப்பு பதிப்பு மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

  • LED முகப்பு விளக்குகள் 
  • செமி டிஜிட்டல் மீட்டர் 
  • அட்ஜஸ்டபிள் சாக்ஸ் 
  • டைமண்ட் கட் அலாய் வீல்
  • பிரீமியம் மெரூன் இருக்கை
  • ஸ்டார்லைட் ப்ளூ வண்ணம் 
  • கிராண்டே பேட்ஜ் 
  • பீஜ் பேனல் 
  • குரோம் அலங்காரங்கள் 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  7.88 bhp (7500 rpm) திறனும்  8 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. TVS ஜூபிடர் கிராண்டே சிறப்பு பதிப்பு மாடல் இரண்டு டிஸ்க் மற்றும் ட்ரம் பிரேக் என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 

TVS ஜூபிடர் கிராண்டே சிறப்பு பதிப்பு மாடலின் டெல்லி ஷோரூம் விலை விவரம்:
Disc: Rs. 59648 
Drum: Rs. 55936

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.