வெளியிடப்பட்டது TVS ஸ்டார் சிட்டி + ன் சிறப்பு கோல்ட் எடிசன்

2015 ஆம் ஆண்டின் சிறந்த பைக் விருது பெற்ற ஸ்டார் சிட்டி + ன் சிறப்பு கோல்ட் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு எடிசனில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய கோல்ட் வண்ணத்திலும் கிடைக்கிறது. இந்த சிறப்பு எடிசனில் 2015 ஆம் ஆண்டின் சிறந்த பைக் என்று எழுதப்பட்ட லோகோ, கோல்ட் வண்ண அலாய் மட்டும் புதிய வெள்ளை மற்றும் கோல்ட் வண்ண பெயிண்ட் ஆகியவை கிடைக்கும்.

இந்த மாடலில் 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  8.4 bhp (7000 rpm) திறனும் 8.7 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 86 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 85 முதல் 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூபாய் 2000 அதிக விலை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.