ரூ.49,490 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய TVS விக்டர்

TVS நிறுவனம் மாபெரும் வெற்றி பெற்ற விக்டர் மாடலை மீண்டும் ரூ.49,490 சென்னை  ஷோரூம் விலையில் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முன்புறம் ட்ரம் ப்ரேக் மற்றும் டிஸ்க் ப்ரேக் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. முன்புறம் ட்ரம் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.49,490 சென்னை  ஷோரூம் விலையிலும் டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.51,490 சென்னை  ஷோரூம் விலையிலும் கிடைக்கும். 

விக்டர்  மாடல் 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது தான் முழுமையாக TVS நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 9.6 bhp (7500 rpm) திறனும் 9.4 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 76 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மேலும் இந்த மாடல் கருப்பு, ப்ளூ, கிரே, கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை, கருப்பு மற்றும் கிரே கலந்த கலவை மற்றும் சிவப்பு ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.