ரூ 1.15 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது TVS i கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

TVS நிறுவனம் i கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ 1.15 லட்சம் பெங்களூரு ஆன் ரோடு விலையில் வெளியிட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த மாடலை இதன் இணையதள பக்கத்தில் அல்லது அருகி உள்ள ஷோரூமில் ரூ 5000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இந்த மாடல் முதற்கட்டமாக பெங்களுருவில் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நகரங்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TVS i கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 4.4kW மற்றும் 14Nm இழுவைத்திறன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 75km ரேஞ் கொண்டது எனவும் 75km அதிகபட்சவேகம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஈக்கோ டிரைவிங் மோடில் இந்த மாடல் அதிகபட்சம் 40kmph வேகம் வரை தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 2.25kWh லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 5A சார்ஜிங் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். TVS நிறுவனம் வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கான வசதியையும் இந்த மாடலுடன் வழங்குகிறது. இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், முழுவதும் டிஜிட்டல் மயமான LCD இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் பிளூடூத் மொபைல் கனக்டிவிட்டி என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 12-இன்ச் அலாய் வீல், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.