ரூ 55,065 விலையில் வெளியிடப்பட்டது TVS விக்டர் ப்ரீமியம் எடிசன்

TVS நிறுவனம் ரூ 55,065 டெல்லி ஷோரூம் விலையில் விக்டர் ப்ரீமியம் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ், புதிய வண்ணம் மற்றும் சில புதிய ப்ரீமியம் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ப்ரீமியம் எடிசன் மாடலில் புதிய கோல்ட் மற்றும் கருப்பு வண்ண கலவையிலான கிராபிக்ஸ், புதிய கோல்ட் வண்ண பெயிண்ட், புதிய LED பின்புற விளக்கு, புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் கோல்ட் வண்ண எஞ்சின் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மற்றபடி எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் அதே 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 9.6 bhp (7500 rpm) திறனும் 9.4 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 76 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.