மீண்டும் விக்டர் மாடலை களமிறக்கும் TVS

TVS நிறுவனம் மாபெரும் வெற்றி பெற்ற விக்டர் மாடலை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த மாடல் ஜனவரி 20 அம தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் அப்பாச்சி RTR 200 மாடலையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்டர்  மாடல் 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது தான் முழுமையாக TVS நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியிடப்படும் விக்டர் மாடலில் 110 CC என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 8.3 Bhp திறனையும் 8.7 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் முன்புற வீலில் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ரூ.45000 விலை கொண்டதாக வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.