ரூ 42,499 விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்

ஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய கிளிக் ஸ்கூட்டர் மாடலை ரூ 42,499 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதிக பொருள் வைக்கும் இடவசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 110 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 Bhp @7000rpm திறனையும் 8.94 Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் CBS தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிக பாரம் ஏற்றி செல்ல வசதியாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் பெரிய பட்டன் கொண்ட டயர் மற்றும் அகலமான இருக்கை ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு , ப்ளூ க்ரே மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.