விரைவில் வெளியிடப்படும் ட்ரியம்ப் போன்வில்லே பாபர்

ட்ரியம்ப் நிறுவனம்  போன்வில்லே பாபர் மாடலை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத மத்தியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முன்பதிவு ஒரு சில டீலர்ஷிப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த மாடலில் புதிய சேஸி, சஸ்பென்ஷன், டேங்க், பேட்டரி பாக்ஸ் மற்றும் ரைடிங் பொசிசன் அட்ஜஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 310 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 255 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் ஸிஸ்டெமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில்  போனவில்லே T120 மாடலில் உள்ள அதே 1200 cc பேரலல் ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 77 Bhp திறனையும் 106 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ரோடு மற்றும் ரெயின் என இரண்டு டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. இந்த மாடல் 10 முதல் 12 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.