ரூ.7.78 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ட்ரியம்ப் போன்வில்லே T100

ட்ரியம்ப்  நிறுவனம் இந்தியாவில் ரூ.7.78 லட்சம் விலையில் போன்வில்லே T100 மாடலை வெளியிட்டுள்ளது. ட்ரியம்ப் நிறுவனம் இந்த மாடலை உலகளவில் அறிமுகப்படுத்திய அதே மாதத்தில் இந்தியாவிலும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் T120 மாடலின் வடிவங்களையும் ஸ்ட்ரீட் ட்வின் மாடலின் என்ஜினையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் பழமையான வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ப்ளூ/சில்வர், கருப்பு/ சில்வர் மற்றும் ஆரஞ்சு/சில்வர் என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கும். மேலும் ட்ரியம்ப்  நிறுவனம் இந்த மாடலுக்கு 150 விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. 

இந்த மாடலில் ஸ்ட்ரீட் ட்வின் மாடலில் உள்ள 900cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 55Bhp திறனையும் 80 Nm  இழுவைதிறனையும்  வழங்கும். ABS, என்ஜின் இம்மொபிளைசர், டிராக்சன் கண்ட்ரோல், DRL  முகப்பு விளக்கு, சார்ஜிங் போர்ட் மற்றும் பல அடுத்த தலைமுறைக்கு ஏற்ற உபகரணங்கள் இந்த மாடலில் நிறைய பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.