இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ட்ரியம்ப் டைகர் 800

ட்ரியம்ப் நிறுவனம் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு டைகர் 800 மாடலை ரூ 11.76 லட்சம் ஷோரூம் ஆரம்ப  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் XR, XRx மற்றும் XCx என மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் XR மாடல் ஆன் ரோடு மாடலாகவும் XC மாடல் முழுவதும் ஒரு ஆப் ரோடு மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக இந்திய ஷோரூம் விலை விவரம்:
ட்ரியம்ப் டைகர் 800 XR  - ரூ 11.76 லட்சம் 
ட்ரியம்ப் டைகர் 800 XRx - ரூ 13.13 லட்சம் 
ட்ரியம்ப் டைகர் 800 XCx - ரூ 13.76 லட்சம் 

இதன் அணைத்து மாடல்களிலுமே 800cc கொள்ளளவு கொண்ட மூன்று சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 94bhp @ 9500rpm திறனையும் 79Nm @ 8050rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. XR மாடல்களில் Showa சஸ்பென்ஷன், அலாய் வீல் மற்றும் ஆன் ரோடுக்கு ஏற்ற டயர்களும், XC மாடல்களில் WP சஸ்பென்ஷன், ஸ்போக் வீல் மற்றும் ஆப் ரோடுக்கு ஏற்ற டயர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள், 5 இன்ச் TFT ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், விண்ட் ஸ்க்ரீன் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.