ரூ 8.1 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ட்ரியம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர்

ட்ரியம்ப் நிறுவனம் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் மாடலை ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஸ்ட்ரீட் ட்வின் மாடலில் சில ஆப் ரோடு உபகரணங்கள் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஆப் ரோடு பயணத்திற்கு ஏற்றவாறு புதிய ஹேண்டில் பார், அதிக உயரத்திலான புகை போக்கி, இரட்டை இருக்கை, பிளாஸ்டிக் பியூவல் டேங்க் கிரிப் பேட் மற்றும் அண்டர் பாடி பிரேம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஸ்ட்ரீட் ட்வின் மாடலில் உள்ள 900cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 55Bhp திறனையும் 80 Nm இழுவைதிறனையும் வழங்கும். ABS, என்ஜின் இம்மொபிளைசர், டிராக்சன் கண்ட்ரோல், DRL முகப்பு விளக்கு, சார்ஜிங் போர்ட் மற்றும் பல அடுத்த தலைமுறைக்கு ஏற்ற உபகரணங்கள் இந்த மாடலில் நிறைய பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.