ரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ட்ரியம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS

ட்ரியம்ப் நிறுவனம் ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS நேக்ட் மாடலை ரூ 10.55 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S மாடலில் கிடைக்கும் வசதிகளுடன் கூடுதலாக சில வசதிகளும்  ஸ்ட்ரீட் ட்ரிபிள் மாடல்களிலேயே அதிக திறன் கொண்ட எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீட் ட்ரிபிள் S மாடலுடன் கூடுதலாக கிடைக்கும் வசதிகள்:

  • 123Bhp (11,700rpm) திறன் 
  • 77Nm (10,800rpm) இழுவைத்திறன் 
  • ப்ரெம்போ பிரேக் கேலிபர், அடஜஸ்டபிள் லிவர்
  • ஷோவா முன்புற சஸ்பென்ஷன் 
  • ஸ்போர்ட், ரோடு, ரெயின், ரைடர் மற்றும் டிராக் என ஐந்து டிரைவிங் மோடுகள்
  • மேட் சில்வர் வண்ணத்தினாலான பின்புற சப் பிரேம் 
  • பாடி வண்ணத்தினாலான பின்புற இருக்கை கெளல்
  • உயரம் குறைவான செயின் கார்டு

இந்த மாடலில் அதே மூன்று சிலிண்டர் கொண்ட 765cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 123Bhp (11,700rpm) திறனையும் 77Nm (10,800rpm) இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் சில்வர் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். இந்த மாடலின் முதல் கட்ட விநியோகம் சில நாட்களில் தொடங்கப்படும். மற்றும் இரண்டாம் கட்ட விநியோகம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படும். மேலும் இதன் முதல் கட்ட மாடல்கள் ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.