ரெனெகட் கமாண்டோ மொஜாவே மற்றும் ரெனெகட் கிளாசிக் மாடல்களை வெளியிட்டது UM மோட்டார்சைக்கிள்ஸ்

UM மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ரெனெகட் கமாண்டோ மொஜாவே மற்றும் ரெனெகட் கிளாசிக் என இரண்டு புதிய குரூஸர் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரெனெகட் கமாண்டோ மொஜாவே மாடலை ரூ 1.8 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் ரெனெகட் கிளாசிக் மாடலை ரூ 1.89 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிட்டுள்ளது. UM மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ரெனெகட் கமாண்டோ மற்றும் ரெனெகட் ஸ்போர்ட்ஸ் S மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய இரண்டு மாடல்களும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களும் வெளிப்புற தோற்றத்திலும் ஒப்பனையிலும் மட்டுமே மாற்றம் இருக்கும் மற்றபடி எஞ்சின், பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. ரெனெகட் கமாண்டோ மொஜாவே மாடல் ரெனெகட் கமாண்டோ மாடல் போலவே தான் இருக்கும் ஆனால் புதிய மணல் போன்றவண்ணத்தில் கிடைக்கும். ரெனெகட் கிளாசிக் மாடலில் பெயரிற்கு ஏற்றார் போல் கிளாசிக் தோற்றத்தில் பெரிய விண்ட் ஸ்க்ரீன் மற்றும் குரோம் வேலைப்பாடுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

ரெனெகட் கமாண்டோ மொஜாவே மற்றும் ரெனெகட் கிளாசிக் மாடல்களில் புதிய பியூவல் இன்ஜெக்சன் உடன் கூடிய  279 cc கொள்ளளவு கொண்ட BSIV எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.1 Bhp @8500rpm  திறனையும் 23 Nm 7000rpm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல்களில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.