ரூ 68,645 விலையில் வெளியிடப்பட்டது வெஸ்பா நோட் சிறப்பு பதிப்பு மாடல்

பியாஜ்ஜியோ நிறுவனம் வெஸ்பா நோட் 125 சிறப்பு பதிப்பு மாடலை ரூ 68,645 புனே ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முற்றிலும் மேட் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலி மொழியில் Notte என்றால் இரவு (Night) என்று அர்த்தம்.

புதிய வெஸ்பா நோட் சிறப்பு பதிப்பு மாடலில் கண்ணாடி, அலாய் வீல் என சகலமும் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் வெஸ்பா VXL மற்றும் SXL 125 மாடலில் உள்ள  அதே 125 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.06 bhp (7000 rpm) திறனும் 10.6 Nm (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 47 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் TVS N-டார்க், அப்ரிலிய SR125, ஹோன்டா கிரேசியா மற்றும் சுசூகி பார்க் மென் ஸ்ட்ரீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.