புதிய வண்ணங்களில் கிடைக்கும் யமஹா ஃபேசினோ

யமஹா இந்தியா நிறுவனம் ஃபேசினோ ஸ்கூட்டர் மாடலை கோல்ட் மற்றும் ப்ளூ என இரண்டு புதிய வண்ணங்களில் வெளியிட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லை அதே ரூ 56,191 சென்னை ஷோரூம் விலையில் தான் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 13.0 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் பெட்ரோல்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  7.1 bhp (7500rpm)   திறனும் 8.1 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 66 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 80 முதல் 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடலின் முன்புறம் பின்புறத்தில் ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டியூப் லெஸ் டயரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹீரோ மாஸ்டரோ எட்ஜ், ஹோண்டா ஆக்டிவா மற்றும் TVS ஜூபிடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா ஃபேசினோ மாடலின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.