ரூ 1.29 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா ஃபேஷர் 25

யமஹா நிறுவனம் ரூ 1.29 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் ஃபேஷர் 25 மாடலை வெளியிட்டுள்ளது. இது FZ25 மாடலின் முழுமையான ஃபேரிங் வெர்சன் ஆகும். மேலும் இந்த மாடல் FZ25 மாடலை விட ரூ 10,000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் LED முகப்பு விளக்குகள், LCD இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சராசரி மைலேஜ் ஆகியவையும் தெரியும். இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட பியூவல் இன்ஜெக்சன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.9 Bhp (8,000rpm) திறனையும் 20 Nm (6,000rpm) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 43 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வீலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக என்ட்ரி லெவல் ஸ்போர்ட் பைக் வாங்க விரும்புவோருக்கு யமஹா ஃபேஷர் 25 மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.