ரூ.10.88 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா MT-09

யமஹா நிறுவனம் புதிய 2017 ஆம் ஆண்டு MT-09 மாடலை ரூ.10.88 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ், புதிய சஸ்பென்ஷன் மற்றும் கூடுதலாக சில உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை(ரூ 11.36 லட்சம்) விட விலை குறைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் MT-10 போல வெளிப்புற வண்ணம் மற்றும் வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ப்ளூ, மேட் க்ரே  மற்றும் பச்சை கலந்த க்ரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் ஒரு ஸ்ட்ரீட் ரேசர் வகையை சேர்ந்தது. மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் முழுவது LCD மயமானது. மேலும் இந்த மாடலில் LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 847 cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113.42 Bhp திறனையும் 87.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறத்தில் 298 மிமீ விட்டம் கொண்ட டியூயல் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 245 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS ஆப்சனலாக கிடைக்கும். இந்த மாடல் 100kmph வேகத்தை 3.7 வினாடிகளில் அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

இந்த மாடல் இந்தியாவில் கவாசாகி Z800, ட்ரியம்ப்  ஸ்ட்ரீட்  ட்ரிப்ல் மற்றும் பெனெல்லி TNT போன்ற மடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.