2016 வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் யமஹா MT - 03

யமஹா நிறுவனம் ப்ரீமியம் பைக் செக்மெண்டில் மெதுவாக வளர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் YZF-R3 மாடலை வெளியிட்டது. தற்போது அதன் நேக்ட் வெர்சன் மாடலான MT - 03 மாடலை 2016 வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளது. ஆனால் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்த மாடலில் 321 cc  கொள்ளளவு கொண்ட8 வால்வ் மற்றும்  2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிக்யுட் கூல்ட் என்ஜின் ஆகும். இது   42 bhp (10750rpm)   திறனும் 29.6 NM (9000rpm)  டார்க் எனும் இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 3 லட்சத்திற்கு குறைவான விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.