விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் யமஹா MT-15

யமஹா நிறுவனம் நேக்ட் பைக் வடிவமைப்பிலான MT-15 மாடலை ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலின் முன்பதிவு ஒரு சில டீலர்ஷிப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த மாடல் யமஹா YZF-R15 V3.0 மாடலின் நேக்ட் பைக் வடிவமைப்பிலான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் சோதனை ஓட்டப் படங்கள் ஏற்கனவே நிறைய இணையத்தில் கசிந்தும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் MT-09 மற்றும் MT-10 மாடல்களிலிருந்து சில வடிவமைப்புகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் யமஹா YZF-R15 V3.0 மடலில் உள்ள அதே 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் முறையே 282mm மற்றும் 220mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இந்த மாடலில் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் தோராயமாக ரூ 1.25 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.