MT-07 நைட் ப்ளோ எடிசன் மாடலை வெளிப்படுத்தியது யமஹா

யமஹா நிறுவனம்  MT-07 மாடலின் நைட் ப்ளோ எடிசன்  எனும் சிறப்பு பதிப்பை ஸ்பெயினில் வெளிப்படுத்தியது. இந்த மாடல்  ரேடியன் பச்சை மற்றும் கருப்பு வண்ண கலவை என  புதிய வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மற்றபடி வடிவம் மற்றும் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த மாடலில் 689 cc கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 73.77 Bhp திறனையும் 68 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறத்தில் 282 மிமீ விட்டம் கொண்ட டியூயல் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 245 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS ஆப்சனலாக கிடைக்கும்.

இந்தியாவில் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளுக்கு  மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதால் இந்த மாடல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. சமீபத்தில் தான் MT-09 மாடல்களை இந்தியாவில் வெளியிட்டது Yamaha நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.